2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

48ஆவது சிரார்த்த தின நினைவு தினம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ. கே. வெள்ளையனின் 48ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகளும் நினைவுப் பேருரைகளும், டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி, காலை 10 மணிக்கு, ஹட்டன் டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் அமைச்சர்களான ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணி தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுபினர்கள்
எம். திலகராஜ், அ. அரவிந்த்குமார், வேலு குமார், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், எம். ராம், சரஸ்வதி சிவகுரு, ஆர். ராஜாராம், தமிழ் முற்போக்குக் கூட்டணி பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் எஸ். செபஸ்டியன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன், சங்கத்தின் உபதலைவர்கள் ஆர். ராஜமாணிக்கம், வீ. சிவானந்தன், உதவிச் செயலாளர் எஸ். வீரப்பன், சுரேஷ் சிவகுமார், ஏ. ராஜமாணிக்கம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X