Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 26 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகடிவதையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட சிரேஷ்ட மாணவ மாணவிகள் 58 பேரினது மாணவ அந்தஸ்தை இடை நிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மொழிக்கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் எச்.எம்.எஸ்.பிரியநாத் தெரிவித்தார்.
இவர்களில் சிரேஷ்ட மாணவர்கள் 41 பேரும் மாணவிகள் 17 பேரும் அடங்குகின்றனர். இவர்கள் மஹாபொல சகாய நிதியத்தின் உதவித்தொகை மற்றும் சலுகைகள் எதனையும் பெறமுடியாது என்றும் உபவேந்தரின் அனுமதியின்றி இவர்கள் பல்கலைக்கழக வளவினுள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக நிர்வாகம் அறிவித்தள்ளது.
இம்மாணவர்களுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக நிர்வாகம் குறிப்பிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025