Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை, கோணடிகா தோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோணாடிகா தோட்டத்தின் மேற்பிரிவைச் சேர்ந்த பெருமாள் ரஞ்சனி என்ற எட்டு வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சடலத்தின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தரம் 3 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவி ஆவார்.
இச்சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தோட்ட மக்கள் சிறுமியின் தந்தையை சந்தேகத்தின் பேரில் பிடித்து அடித்ததுடன் கடுகண்ணாவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சிறுமியின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .