Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, ஹாரிஸ்பத்துவ பிரதேசசபைப் பிரிவிலுள்ள ரனவன பாதையை அண்மித்ததாக 15 அடியாகவிருந்த ரம்புக்பொத்த பாதையை 09 அடியாக குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
ரம்புக்பொத்த மாவத்தையில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டமானது ஹாரிஸ்பத்துவ பிரதேசசபை வரை சென்று, அங்கு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 200 வீடுகளுக்குரிய 15 அடி அகலமான பாதையை தனிப்பட்ட 5 வீடுகளைச் சேர்ந்தவர்கள் 9 அடியாகச் குறைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேற்படி செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேசசபைத் தலைவரையும் பொதுமக்களையும் அறிவுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் தமக்கு சரியான தீர்வொன்றை வழங்குமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .