2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு மரண விசாரணை அதிகாரி வேண்டும்

Gavitha   / 2021 ஜனவரி 24 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்கு, மரண விசாரணை அதிகாரியொருவரை நியமிக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கரபத்தனை பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட 12 தோட்டங்களில், 46 ஆயித்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த வரும் நிலையில், இவர்கள் அனைவரும் தனியான மரண விசாரணை அதிகாரியொருவர் இன்மையால், பாரிய சிரமத்துக்கு முகங்கொடுத்து வருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 50 வருடங்களாக, இந்த வைத்தியசாலைக்கு மரண விசாரணை அதிகாரியொருவர் நியமிக்கப்படவில்லை என்றும் திடீரென நிகழும் மரணங்களுக்கு, நுவரெலியா, லிந்துலை, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள மரண விசாரணை அதிகாரியை நாடிச் செல்லவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இறந்தவரின் உடலை உரிய நேரத்தில் நல்லடக்கம் செய்ய முடிவதில்லை என்றும் எனவே, உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மரண விசாரணை அதிகாரியொருவரை நியமிக்க நடவடிக்க எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .