Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2021 ஜனவரி 26 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இந்திய விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஹட்டன், மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள், இன்று (26) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம், மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையிலான பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தன. அத்துடன், இலங்கையில் அதானி நிறுவனம் ஆழமாகக் காலூன்றுவதைக் கண்டிக்கும் பதாதைகளும் காணப்பட்டன.
இந்திய விவசாயிகளின் நியாயமானக் கோரிக்கைகளை, அந்நாட்டு அரசாங்கம் மீள்பரிசீலனைச் செய்யவேண்டும் என்றும் சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதிலிருந்து, அவர்களை பாதுகாக்க, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, தொடர்ந்து 60 நாள்களாக நடைபெறும் தொடர் போராட்டத்தில், இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளமைக்கு, இதன்போது அனுதாபம் தெரிவிக்கப்பட்டு, இந்திய அரசாங்கத்துக்குக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் அதானி கம்பனி, தற்போது இலங்கையின் கிழக்கு முனையத்தைப் பெற்றுக்கொள்வது போல, ஏனைய துறைகளின் நிலங்களையும் பெறுவதற்குத் திரைமறைவில் சதி நடப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்திய நிறுவனமான அதானியின் செயற்பாடுகளை, இந்தியப் பிரஜைகளே கண்டித்து வெறுக்கும் நிலையில், அந்நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு இலங்கை அரசா்கம் அனுமதி வழங்கக் கூடாது என்றும் இதன்போது கோஷம் எழுப்பப்பட்டன.
1 hours ago
22 Oct 2025
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
22 Oct 2025
22 Oct 2025