2021 மார்ச் 06, சனிக்கிழமை

இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல்: சந்தேக நபருக்கு பிணை

Sudharshini   / 2016 ஜூலை 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, மாத்தளை வீதியில் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவருத்துச் சபையின் மாத்தளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸொன்றின் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் கண்டி மேலதிக நீதவான் இந்திக்க அத்தநாயக்க விடுவித்துள்ளார்.

மேற்படி சந்தேக நபரை அலவத்துகொடை பொலிஸார் புதன்கிழமை (13) கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி அக்குறணை நகரில் வைத்து மோட்டார் சைக்கிளில்; சென்ற மேற்படி சந்தேக நபருக்கும் பஸ் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த  நடத்துனர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .