Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சிவாணி ஸ்ரீ / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலையை விரைவில் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
மேற்படி கடதாசி தொழிற்சாலையை திறப்பது குறித்து எம்பிலிபிட்டிய ஓமல்பே சோபித தேரருடனான கலந்துரையாடல் ஒன்று, தேரரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆளுநர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இத்தொழிற்சாலையை மீண்டும் திறப்பதன் மூலம் இம்மாகாணத்தில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்று கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'அபிவிருத்தி அடையும் நாடு' எனும் வேலைத்திட்டத்தை சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறை படுத்துவதே எனது முதல் நோக்கமாகும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .