Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
“ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்ட அனைவருக்கும் நானே பாதுகாப்பு” என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் 12 பேர் என ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் 1,000 பேர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன், இன்று (30) இணைந்துகொண்டனர்.
நாவலப்பிட்டி கிரேண்ட் பெமிலியர் ஹோட்டலில், இன்று (30) நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,
நாவலப்பிட்டி கங்கேஹெல பிரதேச சபையில், எட்டு உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தார்கள் என்றும் அந்த எட்டு பேரும் தம்மோடு இணைந்துகொண்டார்கள் என்றும் தெரிவித்த அவர், அவர்களுடன் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் எம்முடன் இணைந்துகொண்டனர் என்றார்.
“இவர்கள் அனைவருக்கும் நான் பாதுகாப்பு வழங்குவேன். கங்கேஹெல பிரதேச சபையில் எதிர்கட்சி ஒன்று இல்லை. நாவலப்பிட்டியில் மாத்திரமல்ல ஒவ்வொரு தோட்டங்களையும் சேர்ந்த மக்கள், எம்மோடு இணைந்து கொள்வதற்கு வருகிறார்கள்.
“ஐக்கிய தேசிய கட்சி முறையாகச் செயற்படவில்லை என கூறிதான் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ஒரு கட்சியை உருவாக்கினார்கள். அவர்களும் இந்த மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்.
“படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதில்லை. வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதி போன்றவற்றைகூட ஏற்படுத்திக் கொடுத்தது இல்லை. ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக, ரணிலும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும்தான் இலாபத்தை அனுபவித்தனர். எனவே, மக்கள் இன்று எமது பக்கம் வந்துள்ளார்கள்” என்றார்.
1 hours ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025