2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

’ஐ.தே.கவே நூரளையை முன்னேற்றியது’

டி. ஷங்கீதன்   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே, நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தது என, ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வடிவேல் புத்திரசிகாமனி தெரிவித்தார்.

நுவரெலியா கண்றி ஹவுஸ் சுற்றுலா விடுதியில், இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் என்றும் தோட்டப் புறப் பாடசாலைகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரே, மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் போது மாத்திரமே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 7 பேர்ச் காணிகள் வழங்கப்பட்டன என்றும் இதற்கு முன்னர், எந்தவொரு அரசாங்கமும் இதைச் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .