2026 ஜனவரி 28, புதன்கிழமை

கடற்படை வீரரின் தந்தை, சகோதரர் மீது தாக்குதல்

Editorial   / 2020 மே 01 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரியபொல நெட்டிய பிரதேசத்தில், கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, அவரது சகோதரர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், வாரியபொல பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் வாரியபொல ஆதார வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் கடமையாற்றும் வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படைவீரரின் குழந்தை சுகவீனமுற்றிருந்ததால், அதற்கு தேவையான மருந்தைக் கொள்வனவுச் செய்வதற்காக குறித்த இருவரும் மருந்தகம் ஒன்றுக்கு சென்றபோதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்விருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகித்து, சிலர் தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.

கடற்படை வீரர் அவரது வீட்டுக்கு இதுவரை வரவில்லை என்றும் அத்துடன், அவர் கொரோனா தொற்றாளராக அடையாளங் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X