2020 ஜூன் 03, புதன்கிழமை

குப்பைகளை அகற்றுமாறு உத்தரவு

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத். எச்.எம்.ஹேவா

ஹட்டன் நகர சபை அலுவலகத்துக்குப் பின்புறமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை, உடனடியாகக் குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு, ஹட்டன்-டிக்கோயா நகரசபையினருக்கு, மத்திய மாகாண உதவி ஆணையாளர் நிரோஷ வீரகோன் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த இடத்தில் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், அருகில் காணப்படும் விஹாரை, பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார். நேற்று (2) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே, ஆணையாளர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை, மஸ்கெலியா- ரிக்கார்டன் பகுதிக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X