2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு துறைமுக ஊழியருக்கு கொரோனா; நவதிஸ்பனையில் 20 பேர் தனிமை

Kogilavani   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நாவலப்பிட்டிய நவதிஸ்பனையிலுள்ள அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம்  (21) அறிவித்தது.

மேற்படி ஊழியர், நேற்று   (20) கொழும்பு துறைமுகத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அன்றைய தினம் அவர் பேலியாகொடயிலிருந்து பேராதெனியவுக்கு வந்துள்ளதுடன் பின்னர் கம்பளை வரை மற்றுமொரு  தனியார் பஸ்ஸில் பயணித்துள்ளார். கம்பளையிலிருந்து கொத்மலை கடதொரவரை இ.போ.ச பஸ்ஸில் பயணித்த நிலையிலேயே, நாவலப்பிட்டி பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார் என்று  தெரியவருகிறது.

இந்நிலையில் மேற்படி ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, நேற்று   (20)  இரவு அவரது வீட்டுக்குச் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ஹொரன வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அந்நபரை அனுப்பி வைத்துள்ளதுனர்.

அத்துடன் மேற்படி நபரின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உள்ளடங்களாக அந்நபருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 20 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, நவதிஸ்பனை சுகாதார வைத்திய அதிகாரி காரயாலய பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தள்ளனர்.

மேலும் அந்நபர் பயணித்த இ.போ.ச பஸ்ஸும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த பயணிகள் தொடர்பிலான விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .