2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கிளங்கன் வைத்தியசாலையில் மற்றொரு தொற்றாளர்

Gavitha   / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில், மேலும் ஒரு தாதியருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, நாவலப்பிட்டி சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இன்று (20) காலை வெளியான பிசிஆர் பரிசோதனைகளின் முடிவிலேயே, இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தத் தாதியோடு நெருங்கிய தொடர்பில் இருந்த 9 தாதியர்கள், 6 உதவியாளர்கள் உட்பட 15 பேர், 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தாதி, நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்றும் இவர், இதற்கு முன்பு டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கபட்டிருந்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, இந்தத் தாதி தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர்களில், 50க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .