2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

கொடுப்பனவுகள் சென்றடையாதமையால் தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

தங்களது மாதாந்தச் சம்பளத்தில் இருந்து அறவிடப்படும் எந்தவொரு கொடுப்பனவும், அந்தந்தத் துறைக்குச் சென்றடைவதில்லை என்று தெரிவித்து. ஆர்.பி.கே பிளான்டேசனுக்கு உரித்தான பெருந்தோட்டங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள், இன்று (26), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் மாதாந்த வேதனத்தில் இருந்து அறவிடப்படும் சலவை தொழிலாளி, சிகையழங்கார தொழிலாளி, ஆலய கட்டட பணிக்காக அறவிடப்படும் பணங்கள், வங்கி கடன் பணம் ஆகியவை முறையாகச் சென்றடைவதில்லை எனத் தெரிவித்து,  இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

எனினும், தொழிலாளர் தேசிய சங்க  அமைப்பாளர், தோட்ட முகாமையாளரிடம் நேரடியாக சந்தித்துப் பேசியதன் பின்னர், தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .