Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
கொட்டகலை நகரிலுள்ள சகல பாதைகளையும் புனரமைத்து முறையான வடிகான் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், 10 மில்லியன் ரூபாய் நிதியை, 2020 ஆரம்பத்தில் ஒதுக்கிக் கொடுத்துள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது மாதாந்தக் கூட்டம், இன்று (09) கொட்டகலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தவிசாளர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த அமர்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகள், சபையுடன் இணைக்கப்படாமல் இருந்து வந்துள்ளன என்றும் இதனால், சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமான வரியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது என்றும் கூறிய அவர், எனவே, விடுபட்டிருந்த பகுதிகளை, ஜனவரி முதல், பிரதேச சபையுடன் இணைத்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சபையில் தற்போது நிதி கையிருப்பில் உள்ளது என்றும் எனவே, அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கானப் பிரேரணைகளை உடனடியாக சமர்ப்பித்து வேலைகளைப் பூர்த்தி செய்து, செலவுகளுக்கான பணத்தை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
சகல உறுப்பினர்களும் தத்தமது வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்களை உடனடியாக சமர்ப்பித்து, கொடுப்பனவுகளை நேரகாலத்தோடு பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டில் குறைகள் காணப்பட்டிருந்தாலும் அவற்றை மறந்து புதிய ஆண்டில் எமது மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட, பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கோரினார்.
25 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
2 hours ago