Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 29 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
முச்சக்கரவண்டியொன்றை, சாரதியின்றி இயக்கும் முறையொன்றை, நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞனொருவர் கண்டுபிடித்துள்ளார்.
நுவரெலியா, களுகெல்ல பகுதியைச் சேர்ந்த, சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞனே இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
முச்சக்கரவண்டியொன்றை, தொலையியக்கியின் மூலம் (Remote Controller) இவர் கட்டுப்படுத்துகின்றார். இதற்கு, அவருக்கு ஐந்து நாட்கள் மாத்திரமே எடுத்ததாக அவர் கூறினார்.
இயந்திரவியல் தொழில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர், எரிபொருளின் மூலம் ஓடும் முச்சக்கரவண்டியை தொலையியக்கின் மூலம் இயங்கவைப்பதற்கு எடுத்த முயற்சி, பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை பார்வையிடுவதற்கு, பெருந்திரளான மக்கள், தலவாக்கலை நகரசபை மைதானத்தில் கூடியிருந்தனர்.
தன்னிடமிலுள்ள திறமைகளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில், மேலும் சில தொலையியக்கி சாதனங்களைக் கண்டுபிடிக்கவுள்ளதாக குறித்த நபர் கூறியுள்ளார். எனினும், அதற்கான பொருளாதார உதவிகளை செய்யுமிடத்து, தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை தன்னால் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2 hours ago
12 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Sep 2025