2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சிங்கமலையில் ஆணின் சடலம் மீட்பு

Gavitha   / 2021 ஜனவரி 12 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சிங்கமலை வனப்பகுதியில், 
ஆண் ஒருவரின் சடலத்தை, ஹட்டன் பொலிஸார், இன்று (12) மீட்டுள்ளனர்.

கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவைச்  சேர்ந்த 3 பிள்ளைகளின் தற்தையான எம்.மகேஸ்வரன் எனும் 65 வயதுடைய நபரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று முன்தினம் (11) காலை 11 மணியளவில், சிங்கமலை வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார் என்றும் மாலை ஆகியும் இவர் வீட்டுக்குத் திரும்பாதமையால், ஹட்டன் பொலிஸார், பொது மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, விறகு கட்டோடு இந்நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம், பிரதேச பரிசோதனைக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .