2021 மார்ச் 08, திங்கட்கிழமை

தாக்குதலில் ஒருவர் காயம்

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலிஅத்த பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர், பெலிஅத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, பெலிஅத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பெலிஅத்த விஸ்கம்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பிரதேச சபையின் உறுப்பினர், மோட்டார் சைக்கிளில் வந்து தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் வாக்குமூலமளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .