2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நாட்டை விட்டுத் தப்பியோடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இடமில்லை’

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வங்கிகளில் இருந்து பாரிய அளவில் கடன்களைப் பெற்று முதலீடுகளை மேற்கொண்டு, சில நாள்களில் நாட்டை விட்டு ஓடிவிடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இனிமேல் இடமளிக்கப் போவதில்லை என, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

பேராதனையிலுள்ள ரெஸ்ட்ஹவுஸில், நேற்று (01) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தால், வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவில் இந்நாட்டுக்கு முதலீடு வரும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் ஆனால். கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கும் போதே, அது அப்பட்டமான பொய் என்பது மத்திய வங்கியின் அறிக்கையூடாகத் தெரியவருவதாகவும் கூறினார்.  

தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, 2.2 ட்ரில்லியன் கடன் தொகை இருந்தது என்றும் 2015ஆம் ஆண்டு, அது 7.3 ட்ரில்லியன் ரூபாயாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.  

ஆனாலும், 2005ஆம் ஆண்டு 20 ட்ரில்லியன் டொலர்களாக இருந்த இந்நாட்டின் பெறுமதி, 2015ஆம் ஆண்டு 80 ட்ரில்லியன் டொலர் பெறுமதியுள்ள நாடாக மாற்றப்பட்டுள்ளது என்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கடன் மூலம், நாடு பாரிய அபிவிருத்தி கண்டது என்றும் அவர் கூறினார்.  

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இருந்தபோது, பல மடங்கு கடன்கள் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்ததற்கான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .