2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நூரளை பிரதேச சபைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 21 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா  பிரதேச சபையின் நானுஓயா பிரதான காரியாலயக் கட்டடம்  தொடர்பில், நுவரெலியா  மேல் நீதிமன்றத்தில்  தொடரப்பட்டிருந்த  வழக்கு,  மார்ச்  மாதம்  இரண்டாம் திகதிக்கு இன்று (21) ஒத்திவைக்கப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபையின்  தலைமை காரியாலயமாக  இயங்கிவரும்  கட்டடத்தை,  பிரதேச சபைக்கு வரி செலுத்தும் வகையில்  தனிநபர்  ஒருவர்  கடந்த 2002 ஆம் ஆண்டு குத்தகைக்குப் பெற்றிருந்தார்.

காலப்போக்கில் குறித்த நபர், குத்தகையை முறையாக செலுத்துவதற்குத் தவறியுள்ளார்.

இந்நிலையில் நுவரெலியா பிரதேசசபை, குறித்த  கட்டடத்தை மீளப்பெற முயற்சித்தபோது, குத்தகைக்குப் பெற்ற நபர் கட்டடத்தை வழங்க மறுத்துள்ளார். பலவந்தமாக குறித்த கட்டடத்தை, நுவரெலியா பிரதேச சபை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 

இந்நிலையில், பிரதேச சபைக்குறிய  கட்டடம்  தனக்கே சொந்தம் எனவும் அந்தக் கட்டடத்தை தற்போதைய தவிசாளர் தலைமையிலான குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தெரிவித்து குறித்த நபர், நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

மேற்படி வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.நயினா குமாரி முன்னிலையில், இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மார்ச் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .