2021 மார்ச் 01, திங்கட்கிழமை

நாவலப்பிட்டியில் 16 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி, நாவலப்பிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிலையமொன்றில் ஐவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர்களோடு தொடர்பைப் பேணிய 26 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில, 9 ஆண்களும் 7 பெண்களுமாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. 

தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக வைத்திய அதிக்தாரி லலித் கொபிமுன்ன தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .