2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

’நேர்மையான சக்திக்கு ஆதரவு நிச்சயம்’

Gavitha   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக மாத்திரமன்றி, அவர்களின் ஏனைய அடிப்படை உரிமைகளுக்கும் என, நேர்மையுடன் செயற்படும் அனைத்துச் சக்திகளுக்கும் தாம் நிச்சயமாக ஆதரவு நல்குவதாக, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (02) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த சமூகமுமே, அடுத்தக் கட்ட வளர்ச்சிக்காக போராடி வருகின்றனர் என்றும் தங்களது சமூகத்தின் வளர்ச்சியாக, எதிர்மறையான செயற்பாடுகளில் ஈடுபடும் சக்திகளை விமர்சித்து, இன்றைய இளைய சமூதாயத்தினர் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பள உயர்வுப் போரட்டத்துக்கு மாத்திரமன்றி, தொழிலாளர்களின் நலன் சார்ந்த அனைத்துப் போராட்டம், வேலைத்திட்டங்களில் தனது தந்தை, நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியதைப் போன்ளே, தானும் தான் சார்ந்த அமைப்புகளும் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .