2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பசறையில் தொற்றுகள் அதிகரிப்பு

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பசறை பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது என்று, பசறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அந்த வகையில், பசறை தேசியக்கல்லுரியின் ஒன்பது மாணவர்களும் ஏழு மாணவிகளும், பசறையின் பிரிதொரு பாடசாலையில், ஒரு மாணவரும், மேலும் 17 பேர் உட்பட பெண் கான்ஸ்டபிள் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 49 பேர், கொரேனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும்,  இதுவரையில், 26 பேர் மாத்திரமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளமையால், பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவடைந்து வருவதாகவும் எனவே, பசறையின் ஒரு பகுதி முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகளும் தென்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றத.

இதேவேளை, கதிர்காமம், செல்லக்கதிர்காமம் ஆகிய இடங்களிலுள்ள இரண்டு பாடசாலைகளில், கல்விப் பொதுத்தராத சாதாரண மாணவர்கள் இருவருக்கு, இன்று(26) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .