Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2021 ஜனவரி 31 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொத்மலையிலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற கனரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இராவணாகொடை கலப்பிட்டியவில் வசிக்கும் 19 வயதுடைய சந்தருவன் ரணசிங்க மற்றும் என்.ஜீ.தினேஷ் ஆகியோரே உயிரிழந்துள்ளனரென, தெரிவிக்கப்பட்'டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது,
ஐந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த சுற்றி திரிந்த குழுவில் ஒரு சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் கனரக லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
05 Jul 2025