2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

’பொதுமக்கள் நடமாட வேண்டாம்’

Gavitha   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சமநிலை வெப நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையால், இதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், எனவே, ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள், கரையோரங்களில் நடமாடவேண்டாம் என, நீர்த்தேக்க பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீர்த்தேக்கத்துக்கு நீரை வழங்கும் பிரதான நீர் நிலைகளான வளவை கங்கை, பெலிஹுல் ஓயா, தெனகம் ஓயா ஆகிய ஆறுகள் ஊற்றெடுக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது என, தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை, இந்த நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் எனவே, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .