Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.முத்துகிருஸ்ணன்
மரத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்தார்.
மஸ்கெலியா, காட்மோர் தம்பத்தேன தோட்டத் தேயிலை மலையில், 20அடி உயரமுடைய மரத்தின் உச்சியில் சிறுத்தையொன்று மாட்டிக்கொண்டது.
மிருக வேட்டைக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட சிறுத்தை, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையிலேயே வலையிலிருந்து மீண்டு, மரத்தில் ஏறியுள்ளது.
சுமார் எட்டு மணித்தியாலம் கடும் பிரயத்தணத்தின் பின்னர் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள், மஸ்கெலியா பொலிஸார், இராணுவத்தின் இணைந்து சிறுத்தையை மீட்டு, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சிறுத்தையின் சிறுநீரகம் பாதிப்டைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ரந்தெனிகல வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 minute ago
11 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
40 minute ago
2 hours ago