2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியாவில் இருவருக்கு தொற்று

Kogilavani   / 2020 நவம்பர் 20 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

மஸ்கெலியா, பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு  தொற்றாளர்கள் நேற்று (19) இனகாணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்தார்.

வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில், கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35, 19 வயது இளைஞர்கள் இருவர், தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 13 ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரிடமும் கடந்த 17ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை இருவரும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று (19) மாலை அழைத்துசெல்லப்பட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .