Gavitha / 2021 ஜனவரி 17 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில், முதலாளிமார் சம்மேளனத்தால், தொழில் அமைச்சரிடம் முன்மொழியப்பட்டுள்ள யோசனையை, தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் எதுவித முன்னேற்றமும் இல்லாத இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாத என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் போதிய உயர்வு இல்லாத சம்பள யோசனைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என்றும் கம்பனிகள் முன்மொழியும் யோசனைகளில் அனைத்துத் தொழிலாளர்களும் சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு தொழிலாளிக்கு அரை பெயர் வழங்கப்படும் பட்சத்தில் அவருக்கு அன்றை நாளுக்கான சம்பளம் குறைவடையும் என்றும் ஆகவே, இந்த யோசனையை சம்பள நிர்ணய சபையிடமே ஒப்படைத்துவிட்டோம் என்றும் அவர்களே இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
11 minute ago
15 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
20 minute ago
24 minute ago