2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வலப்பனையில் இருவருக்குக் கொரோனா

Gavitha   / 2021 ஜனவரி 31 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை பிரதேச சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட இராகலை, சென்லெணாட்ஸ், கோனகலை ஆகிய தோட்டங்களில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில், வலப்பனை அதிகாரப் பிரிவுக்குடம்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த ஹைபொரஸ்ட், கேனக்கலைத் தோட்டத்தைச் இளைஞர் ஒருவருக்கு, நேற்று (30) கொரோனா ரைவஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இராகலை, சென்லொணாட்டஸ் தோட்டத்தில், 81 வயதுடைய முதியப் பெண்ணொருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ள இரண்டு குடும்பத்தினரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .