2021 மார்ச் 06, சனிக்கிழமை

வெளியாளுக்கு பெருந்தோட்டக் காணி விற்பனை

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள நோர்வூட், நிவ்வெளிகம தோட்டப் பகுதியில் உள்ள 3 ஏக்கர் காணியை, தம்புளை பகுதியிலுள்ளவர்கள் அபகரிக்க முயன்றமையால், நிவ்வளிகம தோட்ட மக்கள், இன்று (12), எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரே, இந்தக் காணித் துண்டை வழங்கியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் காணிக்குள், தம்புளைப் பகுதியைச் சேர்ந்தவர் இன்று (12) உள்நுழைய முயன்றபோது, அப்பகுதியில் கூடிய பொதுமக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .