2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

217 பேருக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 2013 – 2014 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரீசில் வழங்குவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரையாறுக்கப்பட்ட கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கம் இப்புலமைப்;பரிசிலை வழங்க முன்வந்துள்ளதாக அச் சங்கத்தின் அகில இலங்கை உப தலைவரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவருமான சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

தலா 10,000 ரூபாய் படி 217 மாணவர்களுக்கு புலமைப்பரீசில் வழங்கப்படவுள்ளது.   இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(17)  காலை 10.00 மணிக்கு இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சீவெலி மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .