2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

போதைப் பொருள் பாவனை தண்டப் பணம் மூலம் 200 இலட்சம் ரூபா வருமானம்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

2010 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கண்டி மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை தொடர்பான வழக்குகளின் மூலம் 200 இலட்சம் ரூபா தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளது என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கஸ்தூரி ரத்ன தெரிவித்தார்.

இது ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தை விடக் குறைந்த தொகை. அத்துடன் கண்டி மாவட்டத்திலுள்ள 20 பொலிஸ் நிலையங்களிலும் மொத்தம் 5368 வழக்குகள் மூலம் இத்தண்டப் பணம் அறிவிடப் பட்டுள்ளதாக அஎனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 8394 வழக்குகள் மூலம் 340 இலட்சம் ரூபா அறவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் இவ்வருடம் போதைக்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் கீழ் பெருமளவு போதைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X