2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

கண்டி மாவட்டத்தில் 31,000 வீட்டுத்தோட்டங்களை அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கண்டி மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவில் 550 இலட்சம் ரூபாய் செலவில் 31000 வீட்டுத் தோட்டங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அமரனந்த  வீரசிங்க தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைத்  திட்டத்திற்கு அமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அலோசனையின் பேரில் கண்டி மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவில் 31000  வீட்டு தோட்டங்களை அமைக்க மலையக அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ்  அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 3500 வீட்டுத் தோட்டங்கள், பூஜாபிட்டிய பிரதேச செயலகப்பிரிவில் 6700 வீட்டுத் தோட்டங்கள். ஹாரிஸ்பத்துவ பிரதேச  செயலகப்பிரிவில் 8400 வீட்டுத் தோட்டங்கள், கலகெதர பிரதேச செயலகப்பிரிவில் 5700 வீட்டுத் தோட்டங்கள், ஹத்தரலியத்த பிரதேச செயலகப் பிரிவில் 6700 வீட்டுத் தோட்டங்களும் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இத்திட்டம் மகளிர் அமைப்புகள் மூலம் முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X