2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண இளைஞர் யுவதிகளுக்கு உல்லாச பயணத்துறைக்கான பயிற்சிகள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாணத்தில் பாடசாலைக் கல்வியைக் கற்று விலகிய இளைஞர் யுவதிகளுக்கு உல்லாச பயணத்துறைத் தொடர்பான பாடநெறி ஒன்றினை நடத்துவதற்கு மத்திய மாகாண வர்த்தக வாணிப சுற்றுலாத்துறை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்தத் துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கான பயிற்சிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்  முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு மொழிகளின் பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இதன்படி, மத்திய மாகாணத்தில் பாடசாலைகளைக் கல்வியைக் கற்று  விலகிய இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் ஜப்பான், சீனா, ஜேர்மன் மற்றும் பிரஞ்சுச் ஆகிய  பயிற்சிகளை வழங்குவதற்கு மாத்தளையிலுள்ள ஹோட்டல் பாடசாலையிலும் கிரிபத்கும்புர வேலிவிட ஸ்ரீ சரணங்கர பயிற்சி நிலையம் மற்றும் ஹசலக்க உல்பத்கம சுதர்சனாராமய விஹாரையிலுள்ள பயிற்சி நிலையம் என்பவற்றிலும்    பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண வாணிப, சுற்றுலாத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. 

இவ்வாறு  பயிற்சிகளைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு மத்திய மாகாணத்தில்  உல்லாசப் பயணத்துறையில் உரிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள கூடியதாகவுள்ளதால் இந்தப்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான இளைஞர் யுவதிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாகத் தெரிவு செய்வதற்கு மத்திய மாகாண வாணிப சுற்றுலாத்துறை  திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இந்தத்திணைக்களம் மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளமைக்குறிப்பிடத்தக்கது. இதேவேளை மேற்படி பயிற்சியினைப் பெற விரும்புகின்றவர்கள் கண்டி, இலக்கம் 244,  கடுகஸ்தோட்டை வீதியிலுள்ள மத்திய மாகாண வர்த்தக வாணிப சுற்றுலாத்துறை  திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .