2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒழுக்க விழுமியங்கள் மறைவதே மலையக கல்வி பின்னடைவுக்கு காரணம் - அனூசியா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மலையகப் தமிழ் பாடசாலைகளில் வளப் பற்றாக்குறை தீர்த்துவைக்கப்பட்டிருந்த போதும் கல்வியின் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு காரணம் ஒழுக்க விழுமியங்கள் மறைந்து கொண்டு போகின்றமையாகுமென மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் திருமதி.அனூசியா சிவராஜா தெரிவித்தார்.

இன்று வத்துகாமம் கல்விவலயத்திற்குற்பட்ட இரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையின் நூற்றான்டு நிறைரவயோட்டி  இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் அவர் மேலும் தெரிவித்ததாவது :-

 

நவீன யுகத்தில் எத்தனையோ திறமைகளும் புலமைகளும் மாணவர்களிடம் உண்டு. இருப்பினும் மணவர்களிடத்தில் ஒழுக்க விழுமியங்கள் படிப்படியாக மறைந்து வருகிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் இன்று நேரடியாகக் காண்கிறோம். இதை வைத்து கல்வி முன்னேறி இருப்பதாகக் கூறுகின்றோம். பெறுபேறுகள் திறமையாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றோம். ஆனால் ஒழுக்க விழுமியங்கள் எங்கோ போய் விட்டன. இதற்கு ஒரு சின்ன உதாரணமே போதுமானதாகும். இன்று கையடக்கத் தொலைபேசியால் சமூகமும் மாணவர்களும் சீரழியும் விதத்தைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அதே போல் மலையகத்தில் போதிய வளங்கள் இல்லாத போது அன்று அடைந்த அடைவுகளை அபரிமித வளங்கள் உள்ள இன்று அடையமுடியாதுள்ளது. இது ஏன்? அன்று ஒழுக்கம் என்ற ஒன்று இருந்தது. இன்று அது இல்லை. எனவே ஒழுக்க விழுமியங்கள் இல்லாத கல்வியால் பயனில்லை" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .