2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உள்ளுராட்சி மன்றங்களில் கீழ்த் தோட்டங்கள் உள்ளடக்கப்படவேண்டும்:கணபதி கனகராஜ்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பெருந்தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களை உள்ளூஉராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் சட்டரீதியாக கொண்டுவரக் கோரி மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றைச் சமர்பிக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை நிர்வாக கட்டமைப்புக்குள் சட்டரீதியாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆனாலும், இந்தச் சபைகளுக்கு பெருந்தோட்ட பிரதேச மக்கள் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து வருகின்றனர். பெருந்தேட்ட குடியிருப்பு பிரதேசங்களை மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தின் கீழ் சட்டரீதியாக இணைத்துக் கொள்ளும் பட்சத்தில் தோட்டப்பகுதி மலையக மக்களின் அபிவிருத்தியில் இச்சபைகள் பெரும் பங்களிப்பை நல்க முடியும். இதனைக் கருத்திற் கொண்டே பெருந்தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களை உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் சட்டரீதியாக கொண்டுவரக் கோரி பிரேரணையை மத்திய மாகாணத்தில் மத்திய மாகாணசபையில் சமர்பிக்கவுள்ளதாக கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--