2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை பெற்றோர்களின் பரீட்சையாக மாறியுள்ளது

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                          (மொஹொமட் ஆஸிக்)

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளின் பரீட்சையை விட பெற்றோர்களின் பரீட்சையாக மாறியுள்ளது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் கண்டி பொல்கொல்லை வளாகத்தில் இடம் பெற்ற வைபவமொன்றில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

"ஆசியாவின் சுபீட்சமிக்க  நாடாக இலங்கையை மாற்றுவதாயின் குணநலப் பண்புள்ள மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதன் மூலமே அது சாத்தியமாகும். இதற்கு ஆசிரியர்களது பங்களிப்பு மிக முக்கியமானது.

கொங்கிறீட் கட்டிடங்களை வான் உயரக் கட்டி ஆச்சரியமாகப் பார்க்கலாம். நெடுஞ்சாலைகளையும் பாலங்களையும் அமைத்து அதனை ஆச்சரியமாகப் பார்க்கலாம் அல்லது சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்தி அழகுபார்படுத்தி இதோ அபிவிருத்தி என்று கூறலாம்.

ஆசியாவின் ஆச்சரியமிக்க விடயம் என சிலர் நினைக்கக் கூடும். அதுவல்ல ஆசியாவின் ஆச்சரியம். நல்ல பன்புகளையும் நற்குணங்களையும் கொண்ட ஒரு சமுதாயம் உருவாகுமானால் அது தான் ஆசியாவின் ஆச்சரியமிக்கது. இதற்காக நாம் எமது கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். கல்வியின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்ப மிக முக்கியம்.

எனவே, இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்குவதாயின் ஆசிரியர்களது பங்கு முக்கியம்" என்றார்.

alt

alt


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--