2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஹட்டன் பஸ் டிப்போ ஊழியர்கள் சேவை புறக்கணிப்பு; பயணிகள் சிரமம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
ஹட்டன் பஸ் டிப்போவைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் ஒருவருக்கும் ஹட்டன் பஸ் டிப்போ ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஹட்டன் நகரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தையடுத்தே,  இந்த பணிப்பு பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை,  ஹட்டன் பஸ் டிப்போ  ஊழியருக்கு எதிராக ஹட்டன் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X