2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் மகா சிவராத்திரி விழா

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் அறநெறிப் பாடசாலைகளின் மகா சிவராத்திரி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவில் இறம்பொடை பக்த அனுமான் ஆலய வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத் சைதன்ய சுவாமி ஜீ  அவர்கள் ஆத்மீக உரையொன்றை  வழங்கினார்.

கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் அறநெறிப் பாடசாலைகளது மாணவ மாணவிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன. சமய அறிவுப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X