Super User / 2011 மார்ச் 25 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.எம்.தாஹிர்)
ஆட்டோவொன்றில் கடத்திச்செல்லப்பட்ட பிறந்து ஒரு நாளேயாகிய சிசுவொன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பசறை 10ஆவது மைல் கல் அருகில் வைத்து கடத்தப்பட்ட சிசு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஆட்டோ சாரதி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துணியொன்றின் மூலம் சுற்றி, மறைத்து எடுத்து செல்லப்பட்ட சிசு பொலிஸார் மேற்கொண்ட தீடிர் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .