Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் பாதாள குழுவினர்களை இணைத்து இந்நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது. இதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது' என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கேகாலை மாவட்ட வேட்பாளர் கனக ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் திங்கட்கிழமை (3) யட்டியாந்தோட்டையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இலங்கை நாடு மட்டுமல்ல, அயல் நாடான இந்தியா உட்பட பல நாடுகளில் 30 வருட காலமாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தை அடியோடு முறியடிப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு மட்டுமே முடிந்தது.
30 வருடங்களாக இரத்தத்தை குடித்த விடுதலைப் புலிகலை முறியடித்து, இன்று வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இதை யாரும்; மறந்துவிடக் கூடாது.
இந்நாட்டில் பயங்கரவாதிகளையும் பாதாள கோஷ்டியினரையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே ஒழித்துக்கட்டியது. மீண்டும் இந்நாட்டில் பயங்கரவாதிகளையும் பாதாள கோஷ்டியினரையும் உருவாக்குவதுக்கு ஐ.தே.க தற்போது அடித்தளமிட்டு வருகின்றது. இதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கொலை செய்வதற்கு பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றார்கள். அண்மைiயில் குருநாகல் பிரதேசத்தில் சிலரை பொலிஸார் கைதுசெய்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின்; முக்கிய அமைச்சர் ஒருவரினாலும் கட்சியின் வேட்பாளர் ஒருவருரினாலும் தற்போது பாதாள கோஷ்டியினரும் பயங்கரவாதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி தாயார்; ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் 60,000 இளைஞர், யுவதிகள் உயிரை தியாகம் செய்து சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அரசியலை நோக்கமாக கொண்டு, மீண்டும் இந்நாட்டில் இளைஞர், யுவதிகளை பலிகொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று நான் ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .