Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சப்ரகமுவ மாகாணத்தில், 500 பேருக்கான ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என, சப்ரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மாய்ந்த வீரசூரிய தெரிவித்தார்.
இந்த நியமனங்கள், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தலைமையில், சப்ரகமுவ மாமகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இரத்தினபுரி, கேகாலை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் விசேட பாடங்களை மய்யமாகக் கொண்டே, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.
அதாவது, கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக் கல்வி கணக்கியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், ஆலோசனை வழிகாட்டல் ஆகிய பாடங்களைக் கற்பதற்கான ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகள் இனங்காணப்பட்டு, அந்தப் பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் ஒரு கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க சட்டத் திட்டங்களுக்கிணங்க, போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அநாவசியத் தலையீடுகள் இன்றியயே, இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன என்றும் இந்த நியமனங்களை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தல் காரணமாக, இது பிற்போடப்பட்டிருந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.
9 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
45 minute ago
1 hours ago