Editorial / 2018 ஜூன் 06 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேவஹெட்ட - ஹோப் தோட்டத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 91 ஆண்டுகள் பழைமையான இராமர் சிலை, இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதென, ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையிலான காலப்பகுதியிலேயே, இது கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள், நேற்று முன்தினம் (05) அதிகாலை 2 மணயளவில் இராமர் சிலை இருப்பதை அவதானித்துள்ளதாகவும், எனினும் காலை 7 மணியளவில் சிலை காணாமற்போயிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுத் தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸில், நேற்று முன்தினம் (05) தோட்ட பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், எனினும் இதுவரை சிலை கிடைக்கவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், அந்த பொலிஸ் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர், நேற்று (06) தெரிவித்தார்.
1924ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்தச் சிலை இரண்டரை அடி உயரமானது என்பதோடு, இதுவோர் ஐம்பொன் சிலை எனவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆலயத்தின் கதவுகள் சேதமடைந்துள்ளமையால், அவை பூட்டப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலையைக் கண்டுபிடிக்க வலியுறுத்தியும், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று முன்தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
45 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
15 Jan 2026