2025 ஜூலை 03, வியாழக்கிழமை

போதியளவு பஸ் இன்மையால் சிரமம்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பிரதேசத்தில், பல கிராமிய வீதிகளில், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், முறையாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால், பிரதேசத்திலுள்ள மக்களும் பாடசாலை மாணவர்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை நகரத்தில் இருந்து, மெத்தகந்த, குருபெவில, வேவல்வத்தை, ​வெல்லவல, எகஸ்லேன்ட் போன்ற பகுதிகளுக்கான பஸ் சேவைகளே, இவ்வாறு முறையாக இடம்பெறுவதில்லை என்றும் இதனால், அதிகளவு மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ​தெரியவருகின்றது.

பாலங்கொடை நகரத்துக்கு தொழில் நிமித்தம் வருகை தந்த பின்னர், எல்லபொல, உட​வெல, அகரெல்ல, ஓபநாயக்க, ஹுனுவல, பெல்மதுளை ஆகிய வழியாக செல்லும் பயணிகளுக்கு மாலை ​6 மணிக்கு பின்னர் பஸ்கள் இருப்பதில்லை என்றும் தூரப் பயண பஸ்களை எதிர்பார்த்து நின்றாலும், அவை குறுகிய தூர பஸ் பயணிக்காக நிறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக, இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளிடம் வினவியபோது, போதியளவு பஸ்களும் ஊழியர்களும் இன்மையாலேயே, இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த தேவைகள் நிறைவேறினால், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .