2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கம்பஹாவில் நீர்த் தட்டுப்பாடு

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களில் மீண்டும் வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீண்டும் பாரிய நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு, பாரிய நீர் தட்டுப்பாட்டு நிலைமைக்கு, இப்பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ளதாகவும், இப்பிரதேச நீர் நிலைகள் உள்ளிட்ட ஆறுகள், கிணறுகள் என்பன வற்றிப் போயுள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியது.

மினுவங்கொட, மீரிகம, திவுலப்பிட்டிய, கம்பஹா, கிரிந்திவெல, அத்தனகல்ல உள்ளிட்ட இம்மாவட்டத்தின் மேலும் பல பிரதேச மக்கள், பாரிய நீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் இது தொடர்பில், அரசாங்கத்தின் கவனத்தித்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரான வண. சரத் இத்தமல்கொட ​தேரர் தெரிவித்தார்.

பவுசர்கள் மூலம் நீரைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான சிறந்த மாற்றுவழியை, அரசாங்கம் தற்காலிகமாகவேனும் மேற்கொள்ள வேண்டும் என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .