Niroshini / 2016 ஜூலை 24 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு நீதிமன்ற கட்டத் தொகுதியில் வைத்து ஆண் சட்டத்தரணி ஒருவர் பெண் சட்டத்தரணியை அச்சுறுத்தி தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக, நீரகொழு;பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்று சம்பந்தமாக நீர்கொழும்பு நீதிமன்ற கட்டத் தொகுதியில் வைத்து ஆண் சட்டத்தரணி ஒருவருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து ஆண் சட்டத்தரணி பெண் சட்டத்தரணியை அச்சுறுத்தி தாக்க முயற்சித்துள்ளார்.
குறித்த இரு சட்டத்தரணிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த பிரச்சினைக்கு காரணம் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் திலக்க வெலிவிட்டவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
26 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago