2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் மக்களுக்கு விழிப்புணர்வு

Editorial   / 2017 மே 27 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

“டெங்குவை ஒழித்து வாழ்க்கையை வெற்றிக் கொள்வோம்” என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பு நகரில், இன்று சனிக்கிழமை டெங்கு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த இந்த தெளிவூட்டும் நிகழ்வுக்கு,  நீர்கொழும்ப மாநகர சபையின் பொது சுகாதார பிரிவு, இராணுவம், சமுர்த்தி மற்றும் சிவில் அமைப்புகள் பல ஒத்துழைப்பு வழங்கியன.

இதன்போது குடாபாடு, கடற்கரைத் தெரு, முன்னக்கரை, பிரதான வீதி, சிறிவர்தன பிரதேசம், கடோல்கலே ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், வீடுகள், காணிகள் சோதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உரிய அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .