Editorial / 2017 மே 30 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை முதல் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க, மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, மீரிகம, கம்பஹா மற்றும் பியகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிக மழை பெய்து வருவதாக, நிலைய முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம். அஜித் நிஷாந்த சந்திரசிறி தெரிவித்தார்.
சீரற்ற கால நிலை காரணமாக இன்று (30) வரை, பியகம தொகுதியில் மாத்திரம் 2,792 குடும்பங்களைச் சேர்ந்த 12,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும், இவர்களுக்கான நிவாரண உதவிகள் தற்போது பியகம பொலிஸார் உள்ளிட்ட சமூக நல அமைப்புக்களின் ஒத்துழைப்போடு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
3 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
2 hours ago