2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பெண், மாணவனின் சடலங்கள் கடலிலிருந்து மீட்பு

Kanagaraj   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு கடற்பரப்பிலிருந்து மாணவன் மற்றும் குடும்பப் பெண்ணின் சடலங்களை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

சுற்றுலா வந்து, நீர்கொழும்பு பீச் பார்க் கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மாலபே உயர் தொழில்நுட்பக்  கல்லூரியைச் சேர்ந்த மொனராகலை, பொத்துவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரோஹன நவீன்ந்ர வீரசேகர என்ற மாணவனின் சடலம், நேற்றுத் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மாலபே உயர் தொழில்நுட்பக்  கல்லூரியில் சிவில் இன்ஜினியர் பாடநெறியைத் தொடரும் மாணவர் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17)  மாலை நீர்கொழும்பு பீச் பார்க் கடல் பகுதியில் விநோதப் பயணம் வந்த நிலையில் நீராடிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான மாணவர் தனது உடம்பில் ஒட்டியிருந்த மணலை கழுவிக்கொள்வதற்காக மீண்டும் கடல் பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது திடீரென்று வந்த பாரிய அலை அவரை கடலுக்கு இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை வீரர்கள் மற்றும் உயிர்க் காப்பு வீர்கள் இணைந்து  சடலத்தை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

இதேவேளை, நுவரெலியா முன்செல்லை வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ராமலிங்கம் தேவிகா (வயது 36) என்ற பெண்ணின் சடலத்தையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமையன்றே மீட்டுள்ளனர். அவர், இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
நீண்டகாலமாக நீர்கொழும்பில் வசித்து வரும் இப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை  கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பெண் தற்கொலைச் செய்து கொண்டிருக்கலாம் என்று அறிமுடிந்துள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனையை  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் மேற்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .